இப்போ உங்களுக்கு பிப்
மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இபோது உங்களுடைய லாப
நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்போம்.
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட்
லாட்(100,000 units) 1.4530 இல்
வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு
அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து
கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள்
முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நாம் வாங்கியதுற்கும்
விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530
கழித்தால்
1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x
20 pips = $137.40
போரெக்ஸ்:அக்கௌன்ட் பல விதம்
ReplyDeleteபோரெக்ஸ் மார்கெட்டில் பல விதமான அக்கௌன்ட்கள் உண்டு. ஒவ்வொரு அக்கௌன்ட்ம் ஒவ்வொரு வகையானவை.
1 மினி அக்கௌன்ட்(mini account )
இந்த வகை அக்கௌன்ட்கள் பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய அக்கௌன்ட் வகையினை சார்ந்தவை.சிறிய முதலீட்டாளர்களுக்கு இந்த வகை அக்கௌன்ட் மிகவும் உதவியாக இருக்கும். லாபம் நஷ்டம் இரண்டும் சிறியதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைய தேவை இல்லை. பயிற்சி பெற ஆவல் உள்ள முதலீட்டாளர்கள் இந்த வகை அக்கௌன்ட் பயன் படுத்தலாம்.
ஸ்ப்ரெட் (spread ) இந்த வகை அக்கௌன்ட்ல் மிகவும் குறைவு.முதலீட்டு தொகையும் குறைவு.
ஸ்ப்ரெட் என்றால் என்ன?
பை விலைக்கும், செல் விலைக்கும் உள்ள வித்தியாசம் தான் ஸ்ப்ரெட் என்பது. குழம்ப வேண்டாம். ஷேர் மார்கெட்டில் வாங்க விற்க கமிசன் என்பார்கள் இல்லையா ? அதை போலத்தான் இதுவும். பத்து பைசா கமிசனுக்கும் இருபது பைசா கமிசனுக்கும் வேறுபாடு உள்ளது போல, ஒரு டாலர் ஸ்ப்ரெட்கும் நான்கு டாலர் ஸ்ப்ரெட்கும் நிறைய வேறுபாடு உண்டு.
நினைவில் கொள்க:
மினி அக்கௌன்ட்டில் ஒரு லாட் என்பது ஒன்று.
ஐம்பது டாலர் முதலீடு போதுமானது.இந்தியா ரூபாயில் 2500
நிறைய போரெக்ஸ் ட்ரேடிங் கம்பனிகள் இந்த வகை அக்கௌன்ட்கள் வைத்து இருப்பதில்லை.
2 . ஸ்டாண்டர்ட் அக்கௌன்ட் (standard account )
இந்த வகை அக்கௌன்ட் மீடியமான முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. குறைந்தபட்சம் 2000அமெரிக்க டாலர் அவசியம்.லாபம் மற்றும் நஷ்டம் அதிகம்.ஒரு லாட் என்பது 10 . குறைந்த பட்ச ஸ்ப்ரெட் 2 முதல் 5 வரை. ஸ்ப்ரெட் இல்லாமலும், ட்ரேட் பண்ணலாம் என்றால் அந்த விதமான போரெக்ஸ் கம்பனிகளை நம்ப வேண்டாம்.